இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனமான ரோகித் சர்மா சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய போட்டிகளில் கோப்பையை கைப்பற்ற வில்லை ஏன் கடைசியாக நடத்த 20 உலக கோப்பை செமி பைன்னல் போட்டியில் தோற்று வெளியேறியது.
இதனால் பலரும் ரோஹித் ஷர்மாவை விமர்சித்தனர் குறிப்பாக கேப்டன்ஷிப் விட்டு அவர் வெளியேற வேண்டும் என சிலர் கூறினார். 20 ஓவர் உலகக் கோப்பையை தொடர்ந்து நியூசிலாந்த் அணிவுடனான தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது பலரும் விமர்சித்தனர்.
தற்பொழுது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா தான் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் உடம்பை குறைத்து சீராக வைத்துக் கொள்ளவும் தற்பொழுது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறாராம்.. ரோகித் சர்மா அடுத்ததாக வங்கதேச தொடரில் பழையபடி அவர் விளையாட பல புதிய யூகங்களை செய்ய இருக்கிறாராம்.
20 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் ஷர்மா ஜொலிக்காமல் போனதற்கு அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றியது தான் காரணம் என கூறப்படுகிறது. எப்பொழுதுமே பயமின்றி அடிக்கக்கூடிய அவர் 20 ஓவர் உலககோப்பை போட்டியில் ஆரம்பத்தில் தடுத்து விளையாடினார் அதுவே அவருக்கு ரன் வருவதை கட்டுப்படுத்தியது. இந்த தவறை திருத்திக்கொள்ள தனது பழைய அதிரடி ஆட்டத்தை அவர் கொண்டு வர பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் செய்ய இருக்கிறாராம்..
இதனால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் ஆட்டம் தனியாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவை போல விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.