இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார் ஏற்கனவே நியூசிலாந்துடனான 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் இதனையடுத்து அவர் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுக்க ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாட்டு வரும் அஸ்வினை ஒருநாள் போட்டிகளிலும் விளையாட வைக்க ரோகித் சர்மா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சமீபத்தில் பேக்ஸ்டேஜ் வித் போறியா என்ற நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார் அதில் அஸ்வின் ஒரு சாம்பியன் பந்துுவீச்சாளர் அஸ்வினை நான் கடந்த 10 வருடங்களாக மேலாக பார்த்து வருகிறேன்.
டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்து வதையும் தாண்டி அவர் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வேண்டும் என எண்ணம் கொண்டவர் அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவருடைய ரன் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் அணியில் பெரிய அளவில் அவர் விளையாடாமல் இருக்கிறார்.
இருப்பினும் அவருடைய திறமை இன்னும் குறையவில்லை அவர் இன்னும் ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் அவரை பவர் பிளேயில் பயன்படுத்தலாம் நடு ஓவர்களிலும் பயன்படுத்தலாம் அப்படி ஒரு சிறப்பான பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பது மிக முக்கியமான ஒன்று என்னை பொருத்தவரை அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் பவுலர் அதாவது ஆட்டத்தின் அனைத்து சமயங்களிலும் பந்துவீச ஒரு சிறந்த பந்து வீச்சாளர் அஸ்வின்.
அவரை போன்ற ஒரு வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார். அவருடைய அனுபவம் எப்பொழுதும் இந்திய அணிக்கு கைகொடுக்கும் அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் நிச்சயம் இடம் பிடிப்பார் என கூறி உள்ளார். அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டிகளில் அஸ்வினை உள்ளே இறங்குவார் என தெரியவந்துள்ளது.