தீபாவளி ரேஸிலிருந்து விலகிய கேப்டன் மில்லர்.? லியோ படத்துக்கு ஆப்பு வைக்கும் நடிகர் தனுஷ்

vijay-
vijay-

நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தீபாவளிக்கு வரும் என முன்பே கூறப்பட்டது அதன்படி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தது படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வந்தனர். படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இன்னும் ஓரிரு வாரத்தில் முடிந்து விடும் இதனால் தீபாவளிக்கு படம் வெளியாகுவது உறுதியென கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு திட்டமிட்ட படக்குழு தற்பொழுது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சத்திய ஜோதி தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னரே ஏதாவது அக்டோபர் மாதமே படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதுவும் பண்டிகை நாட்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இது விஜய்க்கு தற்பொழுது ஆபத்தாக அமைந்துள்ளது விஜயின் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

தற்பொழுது அதே பண்டிகை  நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானால் இரண்டு படங்களுக்குமே பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லியோ படத்திற்கு வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..