திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட மூன்று படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த டைமில் அவதார் திரைப்படம் வெளியானதால் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரியில் மாத்தி வைத்தனர் படக்குழுவினர்.
இதனை தொடர்ந்து மறுபடியும் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளனர். அந்த வகையில் வாத்தி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. வாத்தி திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கேரளா மற்றும் தென்காசி ஆகிய வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் கேப்டன் மிலர் திரைப்படம் மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு சில காட்சிகள் மட்டும் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேப்டன் மிலர் திரைப்படத்திற்காக ஒரு செட் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த செட்டை பார்த்த தனுஷ் இந்த படத்திற்கு இவ்வளவு எளிமையான செட்டா வேண்டாம் இன்னும் பிரமாண்டமாக ஒரு செட்டை அமைக்க வேண்டும் என்று தன்னுடைய பாணியில் கூறியிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான செட் அமைத்தால் மட்டும்தான் நான் நடிப்பேன் என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டாராம்.
இதனால் படகுழுவினர் மிக அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் தனுஷ் அவர்கள் இது போன்று ஒரு முடிவை எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாம் அது மட்டுமல்லாமல் தனுசு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இத்த தாகவல் உறுதியான தகவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். வேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.