கேப்டன் மில்லர் VS அயலான் : கேப்டன் மில்லரிடம் அடிபணிந்ததா அயலான் ஏலியன்.! வசூலில் யார் முதலிடம்.?

ayalaan vs captain miller box office
ayalaan vs captain miller box office

Captain Miller vs ayalan box office collection :  பொதுவாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பண்டிகை நாட்களை கூறி வைத்து பெரிய நடிகர்களின் திரைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அதற்கு காரணம் அப்பொழுதுதான் போட்ட பணத்தை எடுக்கலாம் வசூலில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்ப்பார்கள் இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கேப்டன் மில்லர், அயலான், சாப்டர் மிஷின் 1, மெரி கிறிஸ்மஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர் இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், அதிதீபாலன் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்துக்கு பயத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

அயலான்

ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அயலான் இந்த திரைப்படத்தில் ஒரு ஏலியனும் மனிதனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இன்னும் சில முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள் இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமார் இந்த திரைப்படத்திலும் தன்னுடைய பெஸ்ட் நிரூபித்துள்ளார்.

அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியனுக்கு  நடிகர் சித்தார்த்தான் வாய்ஸ் கொடுத்துள்ளார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி எஃப் எக்ஸ் பணிகள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நடைபெற்று வந்தது படம் குழந்தைகளுக்கு பிடிக்கும் படி அமைந்துள்ளது என பலரும் கூறி வந்தார்கள்.

அயலான் திரைப்படம் முதல் நாள் ரிலீஸ் இல் ஓரளவு நல்ல விமர்சனங்களை தான் பெற்று வந்தது ரிலீசான முதல் நாளில் அயலான் திரைப்படம் இந்திய அளவில் 4 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது இரண்டாவது நாளான இன்று திரையரங்கில் டிக்கெட் புக்கிங் ஆகிவிட்டதாகவும் இன்றைய வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இன்னும் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல வசூல் வேட்டை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

5 வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகிய அயலான் ரசிகர்களை கவர்ந்ததா.!

அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படம் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஆனால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ரத்தம் தரிக்கும் காட்சிகளும் இருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சரமாரியான சண்டை காட்சிகள் இருந்தது. அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சூடும் காட்சிகளும் சண்டை காட்சிகளும் அதிகமாக இருக்கிறது இந்த திரைப்படமும் திரையரங்கில் 80 சதவீதம் ஹவுஸ்புள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அதாவது அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது ஆனால் வரும் நாட்களில் இந்த நிலைமை தலைகீழாக கூட மாறலாம் அதேபோல் மிஷன் சாப்டர் 1 விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் ஆகிய திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.