captain miller vs ayalaan : 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழில் நான்கு திரைப்படங்களும் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களும் வெளியாகி உள்ளன அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் சிவகார்த்திகேயன் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் என நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது.
அதேபோல் இந்த பொங்கல் ரேசில் லால் சலாம் அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ரஜினி, அஜித், விஜய் ஆகிய திரைப்படங்கள் வெளியானால் தான் தீபாவளி பொங்கலாக மாறிவிட்டது ஏனென்றால் அவர்கள் திரைப்படத்திற்கு தான் நல்ல வரவேற்பு திரையரங்கில் இருக்கிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமீப காலமாக பண்டிகை நாட்களில் குறி வைத்து படத்தை ரிலீஸ் செய்கிறார் அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படியாக அயலான் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். அதேபோல் தனுஷும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை கொடுத்துள்ளார் இரண்டு திரைப்படங்கள் வசூல் நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.
முதல் நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் இரண்டாவது நாளில் கணிசமாக வசூல் குறைந்தது அதாவது ஆறு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது என தகவல் கிடைத்துள்ளது. இரண்டு நாளுக்கும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 14 முதல் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் முதல் நாளில் கேப்டன் மில்லர் 15 முதல் 17 கோடி வரை வசூல் செய்ததாக கணிக்கப்பட்டுள்ளது அதேபோல் இரண்டாவது நாளின் முடிவில் உலகம் முழுவதும் 22 கோடி முதல் 23 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் அயலான் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் நாலு முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருந்ததாகவும் உலகம் முழுவதும் பத்து முதல் 12 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் கிடைத்தது. அதேபோல் இரண்டாவது நாளில் கேப்டன் மில்லர் போல் வசூலில் குறையாமல் வசூல் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது அதாவது அயலான் திரைப்படத்திற்கு மேலும் சில இடங்களில் ஸ்கிரீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் காரணமாக இரண்டாவது நாளில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் மில்லரை ஒரு வழியாக ஓரம் கட்டி விடும் என பலரும் கூறி வருகிறார்கள் ஏனென்றால் இன்னும் நான்கு நாட்கள் வரிசையாக தொடர் விடுமுறை என்பதால் அயலான் வசூல் அதிகரிக்கும் என கூறுகிறார்கள்.
இன்னும் ஒரு வாரம் கழித்து தான் தெரியும் ரியல் பொங்கல் வின்னர் யார் என்பது.