captain miller vs ayalaan box office : இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் நான்கு திரைப்படங்கள் வெளியாகின இந்த நிலையில் தனுஷுக்கு கேப்டன் மில்லர் திரைப்படமும், சிவகார்த்திகேயனுக்கு அயலான் திரைப்படமும், அருண் விஜய்க்கு மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மெரி கிறிஸ்மஸ் திரைப்படமும் வெளியாகியது.
இந்த நான்கு திரைப்படங்களும் போட்டி போட்டுக் கொண்டு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தான் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் இந்த நிலையில் கேப்டன் மில்லர் முதல் நாளில் வசூல் வேட்டையை ஆரம்பித்தது.
மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் கத்ரினா கைஃப் சம்பளம் இத்தனை கோடியா.? வெளியான தகவல்
அதேபோல் அயலான் திரைப்படம் முதல் நாளில் டல்லாக தான் வசூல் இருந்தது ஆனால் நாளடைவில் வசூல் அதிகரித்து கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு டப் கொடுத்து வருகிறது. அதே போல் இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி ஏழு நாட்கள் ஆகி உள்ள நிலையில் 7 நாள் வசூல் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் 61 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதே போல் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 7 நாட்கள் முடிவில் உலக அளவில் 63 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறுகிறார்கள்.
முதல் நாளில் கேப்டன் மில்லரை விட குறைவான வசூலை செய்த அயலான் தற்பொழுது ஏழு நாட்கள் முடிவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தையே வசூல் ரீதியாக பின்னுக்கு தள்ளியுள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகிறார்கள் ஆனால் இனிவரும் நாட்களில் எந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பார்க்கலாம் விரைவில் பொங்கல் ரேசில் யார் வின்னர் என்பதும் தெரிய வரும்.