captain miller vs ayalaan box office collection : பண்டிகை நாட்கள் என்றாலே முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுவார்கள் அந்த வகையில் ரஜினி கமல், விஜய் அஜித், சிம்பு தனுஷ் ஆகிய திரைப்படங்கள் தான் வெளியாகும் ஆனால் இந்த வரிசையில் இந்த வருடம் தனுஷ் சிவகார்த்திகேயன் நேருக்கு நேராக மோதி உள்ளார்கள்.
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் சூடு பிடித்துள்ளது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தனுஷ் தான் நுழைவதற்கு உறுதுணையாக இருந்தார்.
நான் மட்டுமல்ல என் கணவரும் கர்ப்பம் தான்.? புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளம்பிய அமலாபால்…
ஆனால் தற்பொழுது தனுஷ் அவர்களுடன் நேரடியாக ரேஸில் மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதேபோல் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தை தனுஷ் அவர்களே தன்னுடைய சொந்த புரொடக்ஷனில் தயாரித்தார் அந்த சமயத்தில் தனுஷ் சிவகார்த்திகேயன் அனிருத் ஆகியோர்களை அடிக்கடி சந்திக்க முடிந்தது.
ஆனால் தற்பொழுது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சுத்தமாக பேசிக் கொள்வதே கிடையாது கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார் அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலன் திரைப்படத்தை ரவிக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் முதல் நாளில் ஓப்பனிங் நன்றாக இருந்தது அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் 8 புள்ளி 80 கோடி வசூல் செய்திருந்தது அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலான் 3.30 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்திருந்தது
விஜயகாந்த் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.! வருத்தப்படும் கேப்டன் ரசிகர்கள்
இதனால் கேப்டன் மில்லர் தான் பொங்கல் ரேஸில் வெற்றி பெறுவார் என பலரும் கூறிவந்த நிலையில் இரண்டாவது நாளில் 7 புள்ளி 4 5 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் குறைய தொடங்கியது ஆனால் இரண்டாவது நாளில் 4.35 கோடி கலெக்ஷன் செய்தது பாக்ஸ் ஆபிஸில் அயலான் திரைப்படம் முன்னேறிக் கொண்டிருக்கிறது ஆனால் கேப்டன் மில்லர் மூன்றாவது நாளில் இன்னும் குறைந்து 7.25 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.
ஆனால் மூன்றாவது நாளில் 5.50 கோடி கலெக்ஷன் செய்து பாக்ஸ் ஆபிஸில் அதிகரிக்க தொடங்கியது அந்த வகையில் ஒட்டுமொத்தமாக கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று தினங்களில் 23.75 கோடியும் அயலான் திரைப்படம் 13 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது ஆனால் நாளுக்கு நாள் கேப்டன் மில்லரை விட அயலான் திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பொங்கல் ரேசில் வின்னர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.