Captain Miller VS Ayalaan : பொங்கல் தினத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நேருக்கு நேராக மோதி கொண்டார்கள் அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆகியது இதில் ஆரம்பக் காலகட்டத்தில் கேப்டன் மில்லர் மாஸ் காட்டினாலும் போகப்போக டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது இதனால் அயலான் சிறப்பான சம்பவம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லர், அயலான் ,லால் சலாம் ,ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருந்தன ஆனால் திடீரென ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் தினத்தில் இருந்து பின் வாங்கியது இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் நேருக்கு நேராக மோதி கொண்டார்கள் ஆரம்ப காலகட்டத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
ஆனால் சமீப காலமாக அயலான் திரைப்படத்திற்கு தான் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் அதே போல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட தொடங்கிவிட்டது அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக ஃபேமிலி ஆடியன்ஸ் பார்த்து வருகிறார்கள்.
முதல் நாளை விட அயலான் திரைப்படத்திற்கு அடுத்த அடுத்த நாளில் அதிக வசூல் கிடைத்து வந்தது அந்த வகையில் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக பட குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்த நிலையில் நேற்று வரை பொங்கல் விடுமுறை முடிந்து விட்டது.
அதன் அடிப்படையில் 12ஆம் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதன்படி தனுஷின் கேப்டன் மில்லர் 38 முதல் 40 கோடி வரை வசூல் செய்திருந்ததாகவும் ஆனால் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இதுவரை 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள் இதனால் இந்த பொங்கல் ரேசில் சிவகார்த்திகேயன் தான் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் இது எந்த அளவு முழுமையான தகவல் என்று தெரியவில்லை ஆனால் சமூக வலைதளத்தில் இது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.