தனுஷின் கேப்டன் மில்லர் திரையில் மிரட்டி விட்டதா.? இல்லையா.? இதோ விமர்சனம்…

captain miller twitter review
captain miller twitter review

Captain miller twiiter review : நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் அதிதி பாலன் சந்திப் கிஷான் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்கிற்கு வந்துள்ளது. ஏற்கனவே வெளியாகிய ட்ரெய்லர் மிரட்டி விட்ட நிலையில் படம் இன்னும் திரையரங்கில் மிரட்டப் போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவு நிறைந்த இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது ஆச்சரியமான விஷயம் தான் ஆக்ஷனை தாண்டி எமோஷனல் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாம் அதாவது எளிய மக்களை அந்நியர்கள் கொடுமைப்படுத்திய சுதந்திரப் போராட்ட கதையைக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் நிச்சயம் ஒட்டுமொத்த மக்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி சமூக வலைதளத்தில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளதால் தமிழில் பொங்கலுக்கு வெளியான திரைப்படத்தில் இதுவும் ஒன்று இந்த நிலையில் இந்த பொங்கலுக்கு நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

https://twitter.com/Itz_venka/status/1745681433988128969

இந்த பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர், மேரி கிறிஸ்மஸ், மிஷன் சாப்டர் ஒன், என நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அறிமுக காட்சி இன்னும் பல ரசிகர்களின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது என பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

கேப்டன் மில்லர் திரைப்படம் வெளிநாடுகளிலும் பிற மாநிலங்களிலும் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாதி பிரமாண்டமாக இருந்ததாகவும் ரசிகர்கள் ஆடுகளம் திரைப்படத்தின் காட்சியை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

அதேபோல் கடந்த வருடம் வாத்தி திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்கில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதே போல் தனுஷின் லைஃப் டைம் ரோலாக கேப்டன் மில்லர் திரைப்படம் அசுரன் திரைப்படத்தை விட வெறித்தனமாக இருக்கிறது எனவும் இந்த பொங்கல் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.