Captain Miller Teaser : நடிகர் தனுஷ் ஜூலை 28 இன்று தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் அந்த வகையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை நள்ளிரவு 12.01 மணிக்கு படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர், இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் தனுஷ் அவர்களுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சுதீப் கிருஷ்ணன், ஜான் கொக்கின், நிவேதிதா சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து வருகிறார், தனுஷின் 47-வது திரைப்படமாக கேப்டன் மில்லத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கேப்டன் மில்லர் என்று ஒரு புரட்சித் தலைவர் இருப்பதாகவும் அவருடைய ஸ்டோரி போல் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் கதை.
பிரியங்கா அருள் மோகன் மற்றும் தனுஷ் இருவரும் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி உள்ளார்கள். கையில் துப்பாக்கி புகுந்து விளையாடுகிறது தனுஷ் நீண்ட தாடியுடன் அழகான முடியுடன் புதிய தோற்றத்தில் இந்த திரைப்படத்தில் காணப்படுகிறார் முகமூடி அணிந்த கும்பலுடன் தனுஷ் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இருப்பது போல் காட்சிகள் டீசரில் காட்டப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது போல் இந்த டீசரில் காட்சிகள் இருக்கிறது அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்பொழுது அவர்களுக்கு எதிரான போராட்டமாக தான் இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அருள் மாதேஸ்வரன் ராக்கி, சாணி காயிதம் ஆகிய திரைப்படத்தின் மூலம் வெற்றியை நிர்ணித்த அருண் மாதேஸ்வரன் தற்பொழுது மூன்றாவது திரைப்படமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை நிலை நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ இந்த திரைப்படத்தின் டீசர்.