யார் எடத்துல வந்து யார் Scene-அ போடுறது செஞ்சுருவேன்… கேப்டன் மில்லார் முழு விமர்சனம்..

captain miller review
captain miller review

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர் இந்த திரைப்படத்தை சத்யராஜ் ஜோதி பிலிம்ஸ் நிறுவன தியாகராஜன் தயாரித்துள்ளார் படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷான் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனால் ரசிகர் மத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதேபோல் அருண் மாதேஸ்வரன் தனுஷ் கூட்டணி எப்படி இருக்கும் எனவும் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் கேப்டன் மில்லர் டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களை எவ்வளவு பூர்த்தி செய்துள்ளது என்பதை இங்கே காணலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அயலான்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடைபெற்ற கதை போல் இந்த திரைப்படம் கொண்டு சென்றுள்ளார்கள் அதாவது ஆங்கிலேயனின் பட்டாளத்தில் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் தனுஷ் அதே நேரத்தில் ஆங்கிலேயனை எதிர்த்து தனுஷின் அண்ணன் சிவராஜ் குமார் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம் வெள்ளைக்காரர்கள் கொடுமை மறுபக்கம் ராஜ குடும்பத்தினர் தன்னையும் மக்களையும் தீண்டாமையில் நடத்தும் விதம் என மிகுந்த வேதனையில் வாடுகிறார் தனுஷ் ஆங்கிலேயனின் படையில் சேர்ந்து அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார் தனுஷ் அதன் பிறகு துப்பாக்கி சுடுதலில் சிறந்த சிப்பாயாக தேர்ச்சி பெறுகிறார்.

தேர்ச்சி பெற்ற சிப்பாய்களை வைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் இந்திய மக்களை கொல்ல தனுஷுக்கு உத்தரவு வருகிறது முதலில் அதிர்ச்சியில் உரைந்த தனுஷ் பின்பு கண்களை மூடிக்கொண்டு சுட துவங்குகிறார் ஆரம்பத்தில் சுட்டு தள்ளும் தனுஷ் தன் மக்களை தானே சுட்டுக் கொள்கிறோமோ என மனதில் தோன்றுகிறது உடனே இனிமேல் இந்த தவறை செய்யக்கூடாது என முடிவு செய்கிறார்.

அஜித் அப்படி பண்ணுவாருனு யாருமே எதிர்பார்க்கல.. மொத்த யூனிட்டுமே பயந்துச்சு – ரகசியத்தை உடைக்கும் பிரியங்கா

இந்த நிலையில் உடனே தனக்கு உத்தரவு கொடுத்த ஆங்கிலேயனை கொன்று வீசுகிறார் அதனால் வெள்ளைக்காரர்களின் பகையை சம்பாதிக்கிறார் இதன் பிறகு ஆங்கிலேயர்களால் தேடப்படும் மில்லர் கேப்டன் மில்லராக மாறுகிறார் அதன் பிறகு என்ன நடக்கிறது தனுஷ் என்ன பிரச்சனையை சந்தித்தார் தனுஷ் தன்னுடைய மக்களுக்காக என்ன செய்தார் என்பதுதான்  படத்தின் மீதி கதை.

படத்தைப் பற்றி:

அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் கண்டிப்பாக அதே போல் இந்த திரைப்படமும் ரத்தம் தரிக்கும்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் அதே போல் இந்த திரைப்படம் முழுக்க ஆக்ஷனில் மூழ்கடித்தது. அதிலும் இடைவெளி காட்சியை யாராலும் மறக்க முடியாது அந்த அளவு சரியான கிளைமாக்ஸ் கொடுத்துள்ளார் அருண் மாதேஸ்வரன் கிளைமாக்ஸ் இல் கேப்டன் மில்லர் சம்பவம் செய்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தீண்டாமை குறித்து பேசியதும் எந்த சாமியும் கீழ் ஜாதி மேல் ஜாதி பார்ப்பதில்லை என தனுஷ் மாசாக வசனம் பேசி உள்ளார் பொதுவாக ஜாதி பார்த்து பழகுபவர்களுக்கு சரியான செருப்படி பதில் தனுஷ் இந்த படத்தின் மூலம் கொடுத்துள்ளார் இந்த கதையை ஐந்து அத்தியாயமாக பிரித்து கூறிய விதம் அருமை அதே போல் தனுஷை மூன்று வேடத்தில் காட்டி அருண் மாதேஸ்வரன் அசத்தியுள்ளார் கதையில் சில இடங்களில் தோல்வி இருந்தாலும் அதனை ஜிவி பிரகாஷ் தன்னுடைய இசையால் வலு சேர்கிறார்.

2014 முதல் 2023 வரை பொங்கல் ரிலீஸில் ஜெயித்தது யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ

படத்திற்கு தனுஷ் எப்படி முக்கியமோ அதே அளவிற்கு ஜிவி பிரகாஷ் அவர்களும் முக்கியமாக இருந்துள்ளார் படத்தின் வெற்றிக்கு பின்னணி இசை மூலம் தியேட்டர் சீட்டின் நுனியில் உட்கார வேண்டும் என்பதை வெறித்தனமாக காட்டியுள்ளார் படத்தைப் பார்க்கும் ரசிகர்களே எழுந்து வில்லனை அடிக்கும்படி இசையில் மிரட்டி உள்ளார் ஜிவி பிரகாஷ் அதேபோல் சிவராஜ் குமார் பிரியங்கா மோகன் சந்திப் கிஷன் ஆகியவர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்துள்ளார் மொத்தத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான தரமான சம்பவம் தான் இந்த கேப்டன் மில்லர் என கூறுகிறார்கள் ரசிகர்கள்..