Captain Miller first day collection in box office : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படம் நேற்று ஜனவரி 12ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வெளியாகியது.
மேலும் நேற்று இன்னும் சில திரைப்படங்களும் வெளியாகி உள்ளது அந்த வகையில் அயலான், மிஷன் சாப்டர் ஒன், மேரி கிறிஸ்மஸ் ஆகிய திரைப்படங்களும் வெளியாகி போட்டி போட்டுக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
யார் எடத்துல வந்து யார் Scene-அ போடுறது செஞ்சுருவேன்… கேப்டன் மில்லார் முழு விமர்சனம்..
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் ஆங்கிலேயர் படையில் சேர்வதற்காக முயற்சி செய்து அதில் எப்படியாவது சேர்ந்து விடுவார் பின்பு சிறந்த சிப்பாய் என்ற பெயரையும் எடுத்து விடுவார் அதன் பிறகு ஆங்கிலேயரை எதிர்க்கும் மக்களை கொள்ளும் வேலை வருகிறது முதலில் வேறு வழி இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு சுடும் தனுஷ் பிறகு எதற்காக சுடனும் என யோசித்து சுட சொன்ன வரையே கொலை செய்து விடுவார்.
அதன் பிறகு ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாகும் தனுஷ் எப்படி இதிலிருந்து மீளுகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மக்களை காப்பாற்றினாரா இல்லையா கீழ்த்தர மக்களை முதலாளி என்ற பெயரில் எப்படி கொடுமைப்படுத்துகிறார்கள் அதிலிருந்து எப்படி போராடுகிறார்கள் என்பதை இந்த திரைப்படம் தோலுரித்துக் காட்டியுள்ளது .
Captain Miller : படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?
இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் திரைப்படம் ரத்தம் தெரிக்கும்படி தான் இருந்தது அதேபோல் இந்த திரைப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் பெரிதளவு மக்களை கவர்ந்துள்ளது அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூல் செய்துள்ளது.
அந்த வகையில் கேப்டன் மில்லர் உலக அளவில் 14 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மட்டுமில்லாமல் இன்னும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு கிடைத்து வருவதால் இன்னும் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.