captain miller 4th day collection : இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர் இந்த திரைப்படத்தில் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிய இந்த திரைப்படம் நான்கு நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் நான்கு நாட்கள் வசூல் விவரம் தெரிய வந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் கலந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்தது இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஓட்யே படம் வெளியானது இந்த திரைப்படத்தில் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அதேபோல் தனுஷின் அண்ணனாக சிவராஜ் குமார் நடித்துள்ளார்.
இதுவரை அழகு பதுமையாக நடித்த பிரியங்கா மோகன் இந்த திரைப்படத்தில் ஓரளவு அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் தெறித்தது அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் துப்பாக்கி சத்தம் அதிகமாக இருந்தது அதேபோல் ஜிவி பிரகாஷ் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் நான்காவது நாள் வசூல் தற்பொழுது தெரிய வந்துள்ளது இந்த திரைப்படம் முதல் நாளில் சுமார் 8 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது அதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் ஏழு முதல் ஒன்பது கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் ஞாயிற்றுக்கிழமை ஏழு கோடி வரையே வசூல் செய்து இருந்தது. என தகவல் கிடைத்தது.
சந்திரமுகி 2 பட இயக்குனர் என்னை தனியாக அழைத்து.. கதறி கதறி அழுத லட்சுமிமேனன்..
இந்த நிலையில் நேற்று பொங்கல் தினம் என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் 6.50 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் நான்கு நாட்களில் மொத்தம் 30.45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
வசூல் படிப்படியாக குறைய காரணம் எதிர்மறையான விமர்சனங்கள் தான் என பலரும் கூறி வருகிறார்கள்.