80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாலம் இன்று வரையிலும் இருந்து வருகிறது. சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு உண்மையான நம்பத் தகுந்த ஒரு நபராக வாழ்ந்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அதில் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது ஆனால் சகாப்தம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை இதனால் முதல் படம் தானே தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று இன்னொரு படத்திலும் நடித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மதுரை வீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இதுவே நடிகர் சண்முக பாண்டியன் அவர்களுக்கு இரண்டாவது படமாக உருவானது. ஆனால் இந்த படமும் வெளியாகி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாததால் சினிமா விட்டு சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார்.
தற்போது சண்முக பாண்டியன் சசிகுமார் இயக்கி வரும் ஒரு வெப் தொடரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரியஸ் குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டதாகவும் தகவல்களாகியுள்ளது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை இந்நிலையில் விஜயதசமி அடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சண்முக பாண்டியன் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் கே ஜி எஃப் படத்தில் நடித்துள்ள நடிகர் யாஷ் கெட்டபில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நில் இயக்கத்தில் கேஜிஎப் படத்தில் நடித்தவர் நடிகர் யாஷ் இந்த படத்தில் பெரிய தாடி ஹேர் ஸ்டைலுக்கு இன்றுவரையும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இதே போல் பல இளைஞர்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு தன்னை ஒரு ராகி பாய் என்று நினைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் சண்முக பாண்டியன் அவர்களும் இணைந்துள்ளார்.
இதோ அந்த புகைபடம்…