தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தை தனுஷ் கைவசம் வைத்துள்ளார்.
அதில் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படம் கூட ஒன்று இருக்கிறது ஆனால் செல்வராகவன் சமீபத்தில் திரைப்படம் இயக்குவதை விட திரைப்படங்களில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அண்ணன் தான் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனுஷ் இருந்து வருகிறார்.
மேலும் நடிகர் தனுஷ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் இவர் நேரடியாக திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இளம் இயக்குனர் ஒருவருடன் ஒரு திரைப்படத்தில் கமிட்டாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது அவர் வேறு யாரும் கிடையாது ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் தான் தனுஷின் அடுத்த திரைப்படத்தை இயக்க ஆர்வமாக உள்ளார்.
இவ்வாறு தனுஷ் எடுத்த முடிவால் யாருக்கும் வருத்தம் கிடையாது ஆனால் அவர் எடுத்துள்ள கதைதான் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது ஏனெனில் ஏற்கனவே கேங்ஸ்டர் திரைப்படம் என்ற பெயரில் கார்த்திக் சுப்பராஜ் ஜகமே தந்திரம் என்ற ஒரு தோல்வி திரைப்படத்தை கொடுத்துவிட்டார்.
அந்நிலையில் மறுபடியும் அதே போல கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடிப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது.