விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் 22 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி மொத்தம் 19 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் நடந்த நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகம் தெரியவந்தது.
மேலும் சிலர் செய்த தவறுகளை கமல் அவர்கள் எடுத்துக் கூறியிருந்தார். அந்த வகையில் கமலிடம் அதிகம் அட்வைஸ் வாங்கியவர் தான் அசீம். தான் பேசுவது தான் சரி என எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் மூக்கை நுழைத்து அதனை பெரிதாக ஆகிவிடுகிறார் எனவே சக போட்டியாளர்கள் அனைவரும் அசீமின் மீது குற்றம் கூறி வந்தார்கள். இதனை தொடர்ந்து பெண்களிடம் தரைக்குறைவாக பேசுவது போன்றவற்றையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இப்படியே இவர் செய்து வந்தால் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியாகி உள்ள நிலையில் திங்கட்கிழமை அன்று வாரம் வாரம் நாமினேஷன் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாமேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட இருக்கிறார் அதனைப் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் குறித்த வீடியோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் வேலி ‘மேனிபுலேட் பண்ற மாதிரி இருக்கு, அத்துமீறி பேசியது பிடிக்கல, சின்ன விஷயத்தை பெரியதாக நினைக்கிறார்கள், எந்த சண்டையிலும் தலையிட மாட்டேன் என்கிறார் ஹெல்த்தை பகடை காயாக பயன்படுத்துகிறார் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வாரம் எவிக்ஷன் ப்ராக்சில் எலிமினேட் செய்யப்பட்டவர்கள் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன் மற்றும் விக்ரமன் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த லிஸ்டில் விக்ரமன் இருக்கும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வாரம் அசீம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது அப்படி இவர் இல்லை என்றால் ஆயிஷா தான். ஆனால் கண்டிப்பாக விக்ரமன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற மாட்டார்.