Ajith : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் அஜித்குமார் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகுவதால் அஜித் தற்பொழுது மோட்டார் பைக்கை கையில் எடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் பல முக்கிய இடங்களில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித், விஜய் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது.. 1996 ஆம் ஆண்டு வான்மதி படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.
அந்த சமயத்தில் வான்மதி படத்தில் அஜித்தை டப்பிங் பேசக்கூடாது என்று தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஒதுக்கிவிட்டதாகவும் அவனுக்கு தமிழே சரியா பேச தெரியல கலந்த மாதிரி பேசுறான் டப்பிங் வேண்டாம் என்று தெரிவித்தார் அந்த சமயத்தில்தான் ரஜினி சார் கூட அப்படித்தான் பேசுகிறார்.
அஜித் சரியா தான் பேசுகிறார் ரஜினி சாரையும் மைண்டில் வைத்து ஒரு முறை பேச வைங்கன்னு சொல்லிட்டேன். அஜித்தை டப்பிங் பேச வைத்தார் மேலும் நீ வருவாயா என படத்தில் ஷூட்டிங்கில் ஒரு உதவி இயக்குனர் லேட்டாக வந்தாரு உடனே அன்று டிவிஎஸ் ஸ்கூட்டி வாங்கி கொடுத்து விட்டார்.
அஜித் அவருக்கு ஓட்ட தெரியாதுன்னு சொன்னதும் அதை ஓட்டுவதற்கு ஆள் போடுங்கன்னு சொல்லிட்டார் அப்படி ஒரு நல்லவர் அஜித். அஜித்திற்கு அப்படியே ஆப்போசிட் விஜய் பேசவே மாட்டாரு எப்படி டப்பிங் மட்டும் இப்படி பேசுகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும் என வடிவுக்கரசி கூறினார்.