உன்னுடைய படத்தில் நடிக்க முடியாது.? கமலஹாசனுக்கு செம்ம டோஸ் விட்ட நடிகர் சிவாஜி..!

kamal
kamal

சினிமா உலகில் இரண்டு டாப் ஹீரோக்கள் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று சாதனை வசூல் ரீதியாக சாதனை படைக்கும் அப்படி அண்மைக்காலமாக டாப் ஹீரோக்கள் நடித்து அசத்தி வருகின்றனர் ஆனால் இவர்களுக்கு முன்பு அதை செய்து காட்டியவர்கள் சிவாஜி மற்றும் கமலஹாசன்.

இவர்கள் இருவரும் இணைந்து தேவர்மகன் படத்தில் நடித்து அசத்தினர். இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்பொழுதும் கூட இந்த படம் பலருக்கும் பிடித்த திரைப்படம் ஆக இருந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கமலஹாசனும் சிவாஜிகணேசனும் நடிக்க இருந்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி .

ஆனால் இந்த படத்தின் கதை சிவாஜி கணேசனுக்கு பிடிக்காமல் போகவே பின் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். கமலஹாசன் மாமி வேடம் போட்டு நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி இந்த படத்தில் மீனாவை கல்யாணம் செய்து இருந்தாலும் சில காரணங்களால் அவர் தனது அப்பா வீட்டுக்கு போய் விடுவார்.

மீனாவை கரெக்ட் செய்ய கமல் மாமி வேடம் போட்டு வேலைக்காரியாக அந்த வீட்டில் கமலஹாசன் இருப்பார். இந்த படத்தில் மீனாவுக்கு அப்பாவாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார் அந்த கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க நடிகர் கமல் அணுகி உள்ளார் ஆனால் சிவாஜி கணேசன் பெண் வேடம் போட்ட ஆம்பளையை  ஒரு ஆம்பளை எப்படி காதலிக்க முடியும் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது.

வேறு ஒரு நடிகரை பார்த்துக் கொள் என கமலுக்கு செம டோஸ் விட்டு உள்ளார் சிவாஜி அதன் பிறகு கமல் ஜெமினி கணேசனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அவ்வை சண்முகி   படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி கணேசன், கமலஹாசன், கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள் என்று எடுத்துக்கொண்ட புகைப்படம் அப்பொழுது வெளியாகி வைரலானது.