தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு ஆளானார். அதுமட்டுமில்லாமல் சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்றும் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் காதல் பிணைப்பில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவனிடம் இணைந்து காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். அப்படியிருக்கும் நிலையில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து நடிக்க ஒரு காலகட்டத்தில் நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்தான் சென்னை எக்ஸ்பிரஸ் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோனே ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்கியிருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று 4.23 பில்லியன் வசூலை கடந்தது.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை ரோகித் ஷெட்டி அணுகியுள்ளார் ஆனால் அதற்கு நயன்தாரா முடியவே முடியாது என கூறியுள்ளார் அதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ரோகித் ஷெட்டி சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட நயன்தாராவை அழைத்துள்ளார் இதற்கு நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.
அதற்கு காரணம் அந்தப் பாடலை கோரிய கிராஃப் செய்தது தன்னுடைய முன்னாள் காதலன் பிரபுதேவா என்பதால்தான் அந்த பாடலுக்கு நடனமாட மறுத்துள்ளார். அதன்பிறகுதான் பிரியாமணி 1234 பாடலுக்கு நடனமாடினார் என்பதும் அந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.