தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரஜினியின் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் தற்பொழுது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படம் விமர்சனரீதியாக கொஞ்சம் தடுமாறியது. இந்த நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கும் புதிய திரைப்படத்தையும் சன் பிக்சர் தான் தயாரிக்கிறது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது அதற்காக மிகப்பெரிய செட் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியின் இந்தத் திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் போடப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் எடுக்கப்பட்டு வருகிறது.
இதைப்பார்த்த பெப்சி ஊழியர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் அதாவது படப்பிடிப்பு தமிழ்நாட்டிலேயே நடக்க வேண்டும் என மிகப்பெரிய கோரிக்கை வைத்துள்ளார்கள் ஊழியர்கள் ஏனென்றால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றால் பெப்ஸி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவதாக கூறுகிறார்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றால் சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
தமிழ்நாட்டிலேயே சூட்டிங் எடுப்பதற்கு ஏகப்பட்ட இடங்களில் இருக்கும் பொழுது ஏன் ஹைதராபாத்துக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள் என ஆர்கே செல்வமணி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் இந்த நிலையில் ஆர்கே செல்வமணி குரல் கொடுத்துள்ள இந்த தகவலை சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் பலரும் இங்கேயே படப்பிடிப்பை நடத்துவோம் என வாக்கு கொடுத்துள்ளார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் ஹைதராபாத்தில் ஆரம்பிக்க போகிறது என்பதை கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு உதவிகளை செய்து வரும் ரஜினி இப்படி ஒரு தவறை செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். படக்குழுவினரே ஹைதராபாத்தில் சூட்டிங் நடப்பதற்காக ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் ரஜினி எப்படி உடனே ஒப்புக்கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.