தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது 65வது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. இந்த படத்தை சீரும் சிறப்புமாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எடுத்து வருகிறார்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்த நிலையில் மற்ற படப்பிடிப்பை இந்தியாவை சுற்றி மற்றும் வெளிநாடுகளில் எடுக்க இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். அவர்களில் ஒருவராக பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் காயத்ரி ஷான் என்பவர் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது ஆனால் அதை அப்போது சொல்லாமல் இருந்து வந்துள்ளார் ஆனால் ஒரு கட்டத்தில் அந்த விஷயம் படக் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது எப்படியோ விஜய் சாருக்கு தெரிந்துவிட்டது.
ஒரு தடவை என்னிடம் வந்து நீங்கள் கமல் சார் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய் விளையாட வேண்டியதுதானே என கேட்டுள்ளார் நீங்கள் விளையாண்டாள் நான் பார்ப்பேன் மேலும் என்னுடைய 50 ஓட்டுகள் உங்களுக்கு தான் என அவர் கூறினார் இதை கேட்டவுடன் ரொம்ப சந்தோஷம் அடைந்தார் மேலும் அடுத்த நாளில் அவர் வந்துள்ளார்.
விஜய் நீங்கள் போகலையா என கேட்டதற்கு இல்லை சார் என கூறினார் அதற்கு அவர் ஓகே என கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாக நடிகை பேட்டியில் தெரிவித்தார். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.