விஜய்சேதுபதி போல எல்லோரும் நடிக்க முடியுமா.? வீடியோவை பார்த்து புலம்பி தள்ளும் ரசிகர்கள்.!

vijay-sethupathy
vijay-sethupathy

இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா இந்த படத்தில் லீடிங் ரோலில் விஜய் சேதுபதி மாதவன் ஆகியோர் மிரட்டி இருந்தனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ஷர்தா ஸ்ரீநாத், ராஜ்குமார், விவேக் பிரசன்னா, கதிர், achyuth kumar, பிரேம் ராமதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் வில்லன் மற்றும் ஹீரோவுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை படமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது இந்த படம் சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும் போலீசாக மாதவனும்  பின்னி பெடலெடுத்து இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்..

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே பெயரில் ஹிந்தியில் இயக்குனர் புஷ்கர் காயத்ரி ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சையப் அலி கான் மற்றும் ரித்திக் ரோஷன் மற்றும் பலர்  நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையப் அலிகான் நடிக்கிறார். வேதா கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன் மிரட்டி உள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரித்திக் ரோஷன் விஜய் சேதுபதி ரோலில் நடித்திருக்கிறார் ஆனால் விஜய் சேதுபதி அளவுக்கு அந்த ரோல் அவருக்கு சரியாக பொருந்தவில்லை என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் எல்லோரும் விஜய் சேதுபதி போல ஆகிட முடியுமா எனக் கூறி கிண்டல் அடித்து வருகின்றனர் இதோ விக்ரம் வேதா படத்தின் டீசர்.