தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் வரிசையில் இடம் பிடிக்கின்றன அந்த வகையில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இந்த படம் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக இன்று கோலாகலமாக படம் ரிலீஸ் ஆனது முதல் காட்சி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ரிலீசானது இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர் படத்தின் விமர்சனமும் தற்பொழுது பாசிட்டிவாக வந்த வண்ணமே இருக்கிறது.
இதனால் முதல் நாளே வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை சென்னையில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள் குறிப்பாக ரோகிணி திரையரங்கம் இன்று சிம்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
10 அடிக்கு மேலான சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது 108 தேங்காய் உடைக்கப்பட்டது அதிகாலையிலேயே சிம்புவின் ரசிகர்கள் அவருடைய பாடல்களை போட்டு நடனமாடி அசத்தினர். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க அவரது நண்பரும் நடிகருமான கூல் சுரேஷ் ரோகினி திரையரங்கிற்கு வந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது ரசிகர்கள் அவரைப் பார்க்க முயற்சித்தனர் அப்பொழுது ஆடி காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பிரச்சனை என்னவென்றால் கூல் சுரேஷ் வந்த அந்த கார் அவருடையதே இல்லை ஒரு யூடியூப் சேனல் ஸ்பான்சர் பண்ணிய கார் இந்த கார் தான் தற்பொழுது உடைக்கப்பட்டுள்ளது அந்த காரின் கண்ணாடியை உடைத்ததற்கு ஒரு லட்சம் க்ளைம் பண்ணியிருக்கிறார்களாம் இதனால் கூல் சுரேஷ் மன வருத்தத்தில் இருக்கிறார்.