ஷங்கர் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்ததாக ஏமாற்றம் அடைந்ததை பற்றி உருக்கமாக கூறியுள்ளார் விஜய் டிவி புகழ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.
மேலும் புகழ் ரம்யா பாண்டியனிடம் கெமிஸ்ட்ரி என்ற பெயரில் நகைச்சுவையாக பேசி வருகிறார். அதனை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். எதார்த்தமான நகைச்சுவை டைமிங் சென்ஸ். பாடி லாங்குவேஜ் என பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் புகழ் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தர்ஷ குப்த்தா ,பாபா பாஸ்கர் பவித்ரா புகழ் என பலரும் நகைச்சுவையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஒருபக்கம் அவரின் காமெடிக்கு ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக வலிமை திரைப்படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப்படத்திலும் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சமீபத்தில் இவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அந்த வீடியோவில் என்னுடைய பரம்பரையிலேயே முதல் கார் என தான் கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஊடகமொன்றுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்தார் புகழ் அப்பொழுது தான் ஏமாற்றப் பட்ட சம்பவம் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது இயக்குனர் சங்கர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் கால் வந்தது அந்த போனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு என்னை வர சொன்னார் நானும் ஆர்வமாக சங்கர் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்துவிட்டது என அந்த இடத்திற்கு சென்று போன் செய்தேன். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த புகழ் நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி நிஜத்தில் அல்ல என உருக்கத்துடன் பேசினார்.