சூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதற்குள் தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்.!

vijay
vijay

தளபதி விஜய் அண்மைக்காலமாக தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து வருகிறார் அந்த வகையில் அட்லி உடன் இணைந்து மெர்சல், பிகில் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் மற்றும் நெல்சன் உடன் இணைந்து பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை கொடுத்தார்..

தற்போது தளபதி விஜய் இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையை விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் விஜய் மற்றும் லோகேஷ் இணைய உள்ளனர். தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அவரின் 67 வது திரைப்படம் ஆன அதாவது லோகேஷ் உடன் இணையும் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை லோகேஷ் ஒரு பக்கம் பார்த்து வருகிறார் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் எனவும் படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க உள்ளார்.

மற்றும் இந்த படத்தில் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படம் தொடங்கப்படவே இல்லை அதற்குள்ளே தளபதி 67 படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளது.

ஆம் தளபதி 67 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை தற்போது தளபதி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.