தற்பொழுது சின்னத்திரை நடிகர் அரனாவ் தனது மனைவி திவ்யா ஸ்ரீதர் உடன் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி சமீப பேட்டியில் கூறியுள்ளார் மேலும் அந்த பேட்டியில் இவர் கடைசியில் என்ன ஆனாலும் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது சன் டிவியில் ஒரே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அர்னாவ் திவ்யா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.
பிறகு ஒரே வீட்டில் இருப்பதாக திவ்யா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகராசி தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு தற்பொழுது ஆறு வயதில் மகள் இருக்கிறார் என திவ்யா சமீப பேட்டியில் கூறியிருந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சன் டிவி செவ்வந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா விஜய் டிவி செல்லம்மா தொடரில் நடித்துக் கொண்டு இருக்கும் அர்ச்சனாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
இதனால் இந்த ஜோடிகளுக்கு ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் சில தினங்கள் கழித்து கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா இவ்வாறு இரண்டு தினங்களாக அழுது கொண்டே திவ்யா வெளியிட்ட வீடியோக்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் தற்போது தன்னுடைய கணவர் அரனாவ் வின் மீது பல குற்றங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
மேலும் அவர் கூறியதாவது கர்நாடகாவைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான நான் அரனாவ்வுக்காக முஸ்லிம் பெண்ணாக மாறினேன் இஸ்லாம், இந்து முறைப்படி இரண்டு முறை திருமணம் செய்து கொண்டோம் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்ன அர்னாவ் கூறினார் என பல விஷயங்களை ஷேர் செய்தார் அது மட்டும் இல்லாமல் செல்லமா சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அன்சிகாவுடன் அர்னாவ் நெருக்கமாக பழகி வருவதை தட்டி கேட்ட பொழுது தன்னை அடித்து விட்டதாகவும் வயிற்றில் மிதித்ததாகவும் இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திவ்யா கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அர்னாவ் அதாவது அவர் நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர்தான் என்னை அடித்தார் அதேபோல் அவர் வீணாக சந்தேகப்படுகிறார் மேலும் இதனை மனதில் வைத்துக் கொண்டு மனரீதியாக என்னை துன்பப்படுத்துகிறார் எனக் கூறிய நிலையில் நாங்கள் காதலித்தது சேர்ந்து இருந்ததை எல்லாம் உண்மைதான் அவர் திருமணமானவர் என்பது எனக்கு தெரியும் ஆனால் குழந்தை இருக்கிறது என தெரியாது கல்யாணத்திற்கு கொஞ்ச நாள் முன்பு தான் குழந்தை பற்றி தெரிந்தது.
செல்லம்மா சீரியல் நடிகையுடன் என்னை சந்தேகப்படுகிறார் அவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் நான் பேசி பழகுவது திவ்யாவுக்கு தவறாக தெரிகிறது நண்பர் ஒரு சிலரும் அவரை பேச வைத்துள்ளார்கள் இது முதல் முறையாக அல்ல இதற்கு முன்பு பலமுறை திவ்யா என்னை மிரட்டி உள்ளார் தற்கொலை செய்து கொள்வேன் என தாலியை கழட்டி வைத்து போட்டோ எல்லாம் அனுப்பி இருக்கிறார்.
என் அப்பா முக்கிய பொறுப்பில் இருந்தார் அவர் இந்து திருமண முறைப்படி நாங்கள் திருமணம் செய்து தெரிந்தால் கோபப்படுவார் அதனால் தான் இந்த புகைப்படங்களை ஷேர் செய்ய வேண்டாம் என கூறினேன் ஆனால் திவ்யா அதை மீறி சோசியல் மீடியாவில் பதிவிட்டார் இவ்வாறு இந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி நான் அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என அர்னாவ் பேட்டி அளித்துள்ளார்.