இயக்குனர் மணிரத்தினம் ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை விறுவிறுப்பாக எடுத்து முடித்துள்ளார் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, கார்த்தி, பிரபு, ஜெயராம், விக்ரம், ஜெயம் ரவி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க பொன்னியின் செல்வன் படக்குழு போஸ்டர் பாடல் டீசர் என அனைத்தையும் வெளியிட்டு அதிரவிட்டது அதனை தொடர்ந்து நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் டிரைலர்.
மற்றும் ஆடியோ லாஞ்சை பிரமாண்டமாக நடத்தியது அதற்கு சிறப்பு விருந்தினராக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல், ரஜினி மற்றும் பல முன்னணி நட்சத்திர பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பங்க்ஷன் நல்லபடியாக முடிந்தது ட்ரெய்லரும் மிரட்டலாக இருந்தது நிச்சயம் இந்த படம் பிரம்மாண்டமான ஒரு வெற்றியை பெரும் என பலரும் தற்பொழுது வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே 100 கோடி வசூல் செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுவும் 120 கோடி கொடுத்து..
தன்வசப்படுத்தி உள்ளது பிரம்மாண்ட ஒரு தொகையை கொடுத்து வாங்கி உள்ளது. இது தற்பொழுது திரை உலகை ஆச்சரியப்பட வைத்துள்ளது மேலும் படம் வெளி வருவதற்கு முன்பாகவே 100 கோடி என்றால் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய ஒரு தொகையை வசூலித்து நிற்கும் என பலரின் கருத்தாக இருக்கிறது.