தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் இன்று வெளியாக உள்ளது இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் துனிவு படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ துணிவு படத்தின் பிசினஸ் ரிப்போர்ட்…
160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட துணிவு திரைப்படம் அஜித் அவர்களுக்கு 70 கோடி சம்பளமாக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் “தமிழ்நாடு உரிமை-60 கோடியும், கேரளா உரிமை -2.50 கோடியும், கர்நாடக உரிமை -3.50 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை -1.50 கோடியும், ஹிந்தி டப்பிங் உரிமை -25 கோடியும், வெளிநாட்டு உரிமை-14 கோடியும், ஆடியோ உரிமை- 2 கோடியும், நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் உரிமை 65 கோடியும், கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமை 20 கோடியும், வியாபாரம் ஆகி உள்ளது.
மொத்தமாக துணிவு படத்தின் மொத்த வியாபாரம் மட்டும் 193.60 கோடி வரை விற்கப்பட்டிருக்கிறது. இதனால் துணிவு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இன்றைய தேதி வரை 33.6 கோடி வரை லாபம் பார்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.