RCB அணிக்காக விளையாட வேண்டியவர் பும்ரா – கோலி சொதப்பி விட்டார்.? புலம்பும் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

KOHLI
KOHLI

ஐபிஎல் 15வது சீசன் கடந்த 26 ஆம் தேதி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதுவரை ஒரு சில போட்டிகள் முடிந்துள்ளன அந்த வகையில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக  டு பிளேசிஸ், தினேஷ் கார்த்திக், கோலி போன்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் மூலம் ஆர்சிபி அணி 204 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்திலிருந்து பஞ்சாப் அணி வீரர்கள் ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினர்.

இதன் மூலம் பஞ்சாப் அணி 208 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் தகவல் வந்துள்ளது அதாவது ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டிய வீரர் பும்ரா. ஆனால் அதை மறுத்து விட்டார் கோலி என ஒரு பரபரப்பு செய்தி உலா வருகிறது இது குறித்து விலாவாரியாக பார்ப்போம். பார்த்தீவ் பட்டேல் இது குறித்து பேசியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு RCB அணிக்கு விளையாடியபோது கோலி இடம் பேசினேன். பும்ரா என்ற ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார் அவரை எடுக்கலாமா என்று கேட்டேன். பதிலளித்த கோலி பும்ரா, வும்ரா என ஓவராக புகழ்கிறார்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப் போகிறான் என ஏளனமாக கூறி மறுத்துவிட்டார் அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் அற்புதமான ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளார்.

இன்று உலகின் தலைசிறந்த பவுலராக அவர் விளங்கி வருகிறார். ஆர்சிபி அணியில் மட்டும் பும்ரா இருந்திருந்தால் நிச்சயம் நேற்று நடந்த இமாலய ஸ்கோரைகளுக்கு எதிராக எதிரணியை கதிகலங்க வைத்திருப்பதோடு வெற்றியை பெற உதவி இருப்பார்.