தம்பி எனக்கு என்னதான் வயசு ஆனாலும் தமிழ் சினிமாவில் நான்தான் கிங்க்..! தளபதி கிடையாது..!

rajini-001
rajini-001

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி வெற்றி பெற்றால் மட்டுமே அந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக கருதப்படும் ஆனால் தற்போதெல்லாம் வசூலை மையமாக வைத்து திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்ற 5 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்நிலையில் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த என்ற திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் தான் இயக்கியிருந்தார்.

மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்த அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்திற்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முறை பெண்ணாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தை பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்த திரைப்படம் தான் பதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இத் திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்த இத்திரைப்படம் 125 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும் மூன்றாவது இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஆனது நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். மேலும் இத் திரைப்படம் சுமார் 72 கோடி வசூல் செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

நான்காவது இடத்தை பிடித்த திரைப்படம் தான் கர்ணன். இந்த திரைப்படமானது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் மற்றும் நாயகியாக ராஜிஷா விஜயன் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 5-வது இடத்தை பெற்ற திரைப்படம் தான் சுல்தான்.  இத் திரைப்படமானது கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படமாகும்.

பொதுவாக பல்வேறு திரைப் படங்கள் வெளிவந்தாலும் ரஜினிக்கு வயதாகிவிட்டது என பல்வேறு தரப்பினரும் அவரை கிண்டல் அடித்து வந்தார்கள் அந்த வகையில் தற்போது முன்னிலையில் இருப்பது யாருடைய திரைப்படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் தான் இதனால் விமர்சனம் செய்த பலரும் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.