தனுஷ் மூலம் தனது கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ரகுவரன்.. இப்படி ஒரு சோகமான கதையா?

dhanush
dhanush

Actor Raghuvaran: ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ரகுவரன். இவர் மறைவிற்கு பிறகும் இவருடைய நடிப்பு மற்றும் நினைவு ரசிகர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு இவருடைய சகோதரர் ரகுவரன் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நிலையில் ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அந்த வகையில் ரகுவரன் தனது கடைசி ஆசையை தனுஷ் மூலம் நிறைவேற்றிக் கொண்டதாக அவர் கூறியிருக்கும் தகவல் குறித்து பார்க்கலாம். பொதுவாக வில்லன் என்றால் பார்க்கவே முரட்டுத்தனமாக இருந்தால் மட்டும் தான் அவரை வில்லன் நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ஒல்லியான உடல் அமைப்பு, முகத்தில் மீசையும் இல்லை இருந்தாலும் தனது குரல் வளர்த்தால் முன்னணி நடிகராக சினிமாவில் உயர்ந்தவர் ரகுவரன்.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அப்படி ரஜினி, அஜித், விஜய், அர்ஜுன், சரத்குமார் என பலருடனும் இணைந்து நடித்துள்ளார். பொதுவாக ரகுவரன் நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லனாக வீட்டிலும் இருந்து வருவாராம். பிறகு சைலண்டாகி மிகவும் அமைதியாகவும் மாறிவிடுவாராம். எப்பொழுதும் ஹோம் ஒர்க் செய்து தான் தன்னுடைய நடிப்பை திரையில் காட்டுவாராம் அந்த அளவிற்கு நடிப்பின் மீது காதல் கொண்டவராம் ரகுவரன்.

ரகுவரன் ரோகினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரோகினி ரகுவரனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். ஆனால் ரகுவரனுக்கு அவருடைய மகன் மீது மிகவும் பாசமாக இருந்ததாம் சனிக்கிழமை வந்துவிட்டால் தன்னுடைய மகனை ரகுவரனிடம் விட்டு சென்றுவிடுவாராம் ரோகினி.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் வந்து கூட்டிகிட்டு போவாராம் மகன் வரும்பொழுது அப்பா என்று துள்ளிக் கொண்டு சந்தோஷமாக வருவாராம். ஆனால் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை மகனை அழைத்து வரவே இல்லையாம் ரோகினி. இது ரகுவரனுக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுத்து இருக்கிறது. அப்படி போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் நடித்த கடைசி படமாக யாரடி மோகினி படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அவரைத் தேடி போய் உள்ளார்.

அப்பொழுது நடிகர் தனுஷ் தோலில் கையை போட்டு நீ பார்ப்பதற்கு என்னுடைய மகன் மாதிரியே இருக்க அதனால் இந்த படத்தில் கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொன்னாராம். இந்த அளவிற்கு தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார் என்று ரகுவரனின் தம்பி பேட்டியில் கூறியுள்ளார். இவ்வாறு ரகுவரனின் கடைசி திரைப்படமான யாரடி நீ மோகினி படத்தில் தனது மகனுக்காக அப்பாவாக ரகுவரன் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை கூறும் வகையில் அமைந்திருந்தது.