சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி.! வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

brother first look

Brother first look poster : சிவா மனசுல சக்தி பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் அவர்களுடன் ஜெயம் ரவி இணைந்து தற்பொழுது பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பட குழு அறிவித்துள்ளது அது மட்டும் இல்லாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள் .

மேலும் இந்த திரைப்படம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் பின்னணியில் இதன் கதை உருவாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு 30-வது திரைப்படம். ஆனால் ஜெயம் ரவி ராஜேஷ் உடன் இணைந்துள்ளதால் கோலிலிவுட் சினிமாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ராஜேஷ் காமெடியான திரைப்படங்களை எடுக்க கூடியவர் அதனால் ஜெயம் ரவிக்கு ஒத்து வருமா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி அவர்களுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து பூமிகா, சாவ்லா, சரண்யா பொன்வண்ணன் வீ டி வி கணேஷ், கிருஷ்ணன் குழந்தை நட்சத்திரமாக விருத்தி விஷால் ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். படத்தில் இணைந்துள்ள கலைஞர்களை பார்த்தால் படம் காமெடி திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ராஜேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகிய சிவா மனசுல சக்தி திரைப்படமும் 2010 இல் வெளியாகிய பாஸ் என்கின்ற பாஸ்கரன் 2012 இல் வெளியாகிய ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய திரைப்படங்கள் காமெடி திரைப்படமாக உருவாக்கியது. இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க இருக்கிறார். இதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் ஜெயம் ரவியின் தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி ஜனகணமன, இறைவன், சைரன், ஜெனி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தனி ஒருவன் 2 மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி உடன் புதிய திரைப்படம் என பல திரைப்படங்களில் ஜெயம் ரவி அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

brother first look
brother first look