தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியாமணி என்னதான் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இவர் முதன்முதலில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் திரை படத்தில் ஹீரோயின்னாக நடித்தார் இந்த இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது.
சினிமா உலகில் வெற்றியை ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது பின் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து அசத்தினார். இது போதாத குறைக்கு வெப்சீரிஸ் பக்கமும் தலை காட்டினார் அந்தவகையில் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ்லும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் அறிமுகமான கண்களால் கைது செய் படத்தின் போது நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் அதில் அவர் கூறியது இயக்குனர் பாரதிராஜா இயக்கிய எனது முதல் படமான கண்களால் கைது செய் படத்தில் நடிக்க நான் ரொம்ப பயந்தேன் ஏனென்றால் பாரதிராஜா முன்கோபக்காரர் ரொம்ப சீக்கிரமாகவே கோபம் அடைந்து விடுவார்.
அவர் இயக்கும் திரைப்படம் சரியாக இருக்க வேண்டும் என அவர் நினைப்பார் பெரிய நடிகைகளான ராதிகா, ராதா போன்ற நடிகைகளையே அவர் அடித்துள்ளார் அவர் அடித்தால் அதிர்ஷ்டம் என கூறுவார்கள் ஆனால் நான் அவர் படத்தில் நடிக்கும்போது அடி வாங்க கூடாது என நினைத்தேன் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் என்னையும் அடித்து விட்டார் என கூறினார்.