கன்னட பெண்ணான பிரியாமணி முதலில் மாடலிங் துறையில் இருந்து பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் அந்த வகையில் தமிழில் இவர் முன்னணி நடிகரான கார்த்தியுடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகை என விருதும் வாங்கியுள்ளார். பின்பு இவர் நினைத்தாலே இனிக்கும், சாருலதா, ஆறுமுகம், ராவணன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் இவரது இந்த படங்கள் பெரிதும் மக்களிடையே ரீச் அடையவில்லை.
அதனால் இவர் தமிழை விட தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் பெரிதும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா பற்றி பேசியுள்ளார். அவர் பேசியது சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவருகின்றன.
அந்தவகையில் நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஒட்டுமொத்த படத்தையும் தங்களின் தோள்களில் சுமந்து வருகின்றன. நடிகை நயன்தாரா நெற்றிக்கண் போன்ற சிறந்த படத்தை தேர்வு செய்து நடித்து உள்ளார். மேலும் இவர்கள் டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர்.
தற்போது தமிழ் சினிமா மிகவும் மாறியுள்ளது நடிகைகளுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியது மிகவும் தைரியமான முடிவு எடுத்துள்ளார் என பிரியாமணி தெரிவித்துள்ளார்.