Leo scene cut : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது அன்று திரையரங்கமே திருவிழா போல் காட்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான அதிகாலை காட்சி கொடுக்கப்படாததால் தயாரிப்பாளர்கள் அதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி பிரிமியர் காட்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது அந்த ட்ரைலரில் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போல் ஒரு காட்சியில் இருந்ததால் அதனைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இது குறித்து சமீபத்தில் லோகேஷ் அவர்கள் ஒரு பேட்டியில் பேசிய பொழுது அந்த இடத்தில் அந்த வசனம் தேவைப்பட்டதால் தான் அதனை வைத்தேன் இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நான் தான் கட்டாயப்படுத்தி பேச சொன்னேன் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் லியோ திரைப்படத்தில் உள்ள பல காட்சிகளை டிரைலரில் காண்பிக்கவில்லை படத்தை பார்த்தால் தான் அதன் சுவாரசியம் தெரியும் அதனால் படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் தற்பொழுது என்னால் கூற முடியாது ஒரு பத்து நாள் வெயிட் பண்ணுங்க நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என லோகேஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது படத்தை பார்த்த சென்சார் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் அதில் அவர்கள் கூறியதாவது..
விக்ரம் கமலிடம் வாங்கியது பத்தாதுன்னு leo விஜய்யிடம் வாங்கபோகும் விஜய்சேதுபதி.! லியோ அப்டேட்
புகை மற்றும் போதைப் பொருள்கள் குறித்த காட்சிகள் தகாத கெட்ட வார்த்தைகள் இடம்பெற்ற காட்சிகள் என அனைத்தும் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தில் ரத்தம் தெறிக்கக்கூடிய சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் வரும் சிகரெட் கம்பெனியின் பெயர்கள் என 13 கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.