பாய்ஸ் படத்தில் கில்மாவாக நடிக்க இதுதான் காரணம்.. உண்மையைப் பகிர்ந்த பிரபல நடிகை

boys
boys

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது திரையுலக பயணத்தில் தோல்வியை சாந்தித்தே இல்லை.. மேலும் படங்கள் அனைத்து ஹிட் படங்கள் படங்களாக தான் உள்ளன. அந்த வரிசையில் இணைந்தது தான் 2003 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம்.

இந்த படம்  முழுக்க முழுக்க ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும், சேட்டை மற்றும் பிரச்சினை என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது இதனால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த்த, மணிகண்டன், பரத், நகுல், ஜெனிலியா, விவேக் என மிகப் பெரிய திரை படாளமே நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து சிறப்பாக ஓடியது. இந்த திரைப்படத்தில் ஐந்து இளைஞர்கள் ஒரு வீட்டிற்கு சென்று ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அந்த பெண் கதாபாத்திரத்தில் புவனேஸ்வரி நடித்திருப்பார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற புவனேஸ்வரிடம் அந்த காட்சி குறித்து விளக்கம் கேட்டனர்.

அதில் அவர் சொன்னது.. நான் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சீரியலில் நடித்து வந்தேன் அந்த காட்சியை குறித்து இயக்குனர் ஷங்கர் சார் விவாரித்தார் முதல் படத்திலேயே இதுபோன்ற கதாபாத்திரமா என்று மறுத்தேன்.. அப்பொழுது அவர் ஐந்து இளைஞர்கள் உங்களுடன் நடிக்கும் போது அவர்களின் கைவிரல் கூட உங்கள் மீது படாது என உறுதி அளித்தார்.

boys
boys

அதன் பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்க ஒத்துக் கொண்டேன் இந்த படத்தின் மூலம் எனக்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது என கூறினார். இப்பொழுதும் அவரை நம்பி  ஒன்று, இரண்டு திரைப்படங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன..