ஃபிரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த சிறுவன்.! தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.?

friendship

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் பின்நாட்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போவதும் உண்டு அந்த வகையில் விஜய் சூர்யா இணைந்து நடித்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஃபிரண்ட்ஸ் இத்திரைப்படத்தில் குட்டி விஜய்யாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பரத் ஜெயந்த்.

இவர் 1988 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் இவர் ஆரம்பக் கல்வி படிக்கும் பொழுதே சினிமாவுலகில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் 14 வயது இருக்கும்போது சினிமா உலகில் தனது பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் ஆரம்பத்தில் வானத்தைப்போல, பிரியமானதோழி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து அவர் சிறப்பாக வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு சிறிது இடைவெளி விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார் அதன்பின் இவர் விக்ர இயக்கத்தில் இளமை நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார் மேலும் அதர்வா, நயன்தாரா நடித்த படம் ஒன்றில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அவர் என்ன பண்ணுகிறார் என்று தெரியாத அளவிற்கு சினிமாவிலிருந்து காணாமல் போயுள்ளார். தற்பொழுது பரத் ஜெயந்த் அவர்களுக்கு 34 வயது ஆகிறது அவர் இளம் வயதில் பார்த்த பரத் ஜெயந்த் தற்போது எப்படி இருப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

bharath
bharath