தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படம் உருவாகி வருகிறது. இந்த படம் விஜய் நடிப்பில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
அதனால் படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ், ஷியாம் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதை எடுத்து வாரிசு படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என படக்குழு மும்பரமாக செயல்பட்டு வருகிறது. இந்த படத்தின் காட்சிகள் ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் படி தயார் செய்து வருகிறார். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாரிசு படத்தின் சூட்டிங் இன்னும் முடியாத பட்சத்தில் படத்திற்கான வியாபாரம் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றன. மேலும் வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமையை 65 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமையை 40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு படத்தை ரிலீஸ் செய்வதற்குள்ளேயே போட்ட பட்ஜெட்டை எடுத்துவிடலாம் போல என மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.