நடிகர் அஜித் சமீப காலமாக சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சினிமாவில் ஒரு பக்கம் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் மறுபக்கம் தனது கனவுகளை நிறைவேற்றி வருகிறார் ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தில் இணையாமல் தனது சின்ன சின்ன ஆசையை செய்து வருகிறார் அந்த வகையில் இவர் சமைப்பது, ட்ரோன் இயக்குதல், கார் – பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றையும் செய்து வருகிறார்.
ஏன் அண்மையில் கூட வலிமை படத்தை முடித்துவிட்டு அஜித் இந்தியாவை சுற்றி வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி தனது முடிவுகளை அவ்வப்போது சரியாக செய்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை 20 வருடங்களாக ரசிகர்கள் செல்லமாக புனைப் பெயர் வைத்து காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார், தல என கூப்பிடுகின்றனர் அதற்கும் தற்போது முடிவு கட்டி உள்ளார்.
அஜித் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதாவது அஜித்தின் பெயரை பொது இடத்தில் பேசவோ பயன்படுத்தவோ முதலில் அஜித், அஜித் குமார் அல்லது AK என பயன்படுத்தினால் போதும் புனை பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் வலம் வரும் பவுன்சர்கள் தற்போது அஜித் குறித்து பேசி உள்ளனர்.
நாங்கள் நிகழ்ச்சி அல்லது பொது இடத்திற்கு அஜித்திற்கு பாதுகாப்பாக செல்வோம். நாங்கள் அஜித்துடன் செல்லும் போது அவர் எங்களுடன் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் சாப்பிட்டீர்களா என்பதுதான். சாப்பிடவில்லை என்றால் உடனே எங்களை சாப்பிடச் சொல்வார் முதலில் இரண்டு, மூன்று தடவை பணிவாக சொல்வார்.
கேட்கவில்லை என்றால் ஒரு கட்டத்தில் வில்லன் போல் மாறி ஸ்ட்ரிக்டாக நீங்கள் சாப்பிட்டு தான் வரவேண்டும் என கூறி விடுவார் நாங்களும் சாப்பிட்டு விட்டு வந்தபின் உறுதிப்படுத்திய பிறகே பின் எங்களை அழைத்துச் செல்வார் என பவுன்சர்கள் கூறிய செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.