பிரபல நடிகை ஒருவர் தமிழில் அறிமுகமாகி இரண்டு படத்தில் மட்டும் நடித்து தற்போது பிரபலமாகி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவர் இரண்டு படத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் தற்போது தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு பைசா கூட குறைய கூடாது என்று காரராக பேசி வருகிறாராம்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து நடிகை மஞ்சு வாரியார். இவர் மலையாளத்தை தொடர்ந்து தமிழில் 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியார். அதிலும் குறிப்பாக துணிவு திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் செசபட்டு வருகிறது.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியார் இன்னும் 5 திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியார். அந்த வகையில் ஒரு படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த மஞ்சு வாரியார் தற்போது நான்கு கோடி வரை சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் அந்த நான்கு கோடியில் ஒரு பைசா குறைந்தால் கூட அந்த படத்தில் நடிக்க முடியாது என்று காரராக கூறி வருகிறாராம் நடிகை மஞ்சு வாரியார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.