டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு கேட்காது அஜித்தை தாக்கிய போஸ் வெங்கட்.. கழுதை கதை சொல்லி பதிலடி கொடுத்த ஜான் கொக்கன்

Ajith
Ajith

Ajith : தமிழகத்தை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் பற்றி தான் தொடர்ந்து செய்திகள் வெளி வருகின்றன. இந்தப் புயல் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் அதிகமாக கனமழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பொது மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனால் பலரும் முன்வந்து பல ர் தானாகவே வந்து உதவிகள் செய்ய ஆரம்பித்தனர் அப்படி கேபிஒய் பாலா 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். கார்த்தி, சூர்யா போன்ற நடிகர்கள் காசோலை வழங்கினர். விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

2023-ல் ஹீரோவாக ஜொலித்த மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்.. அடுத்த சிவகார்த்திகேயனாக மாறிய கவின்

நடிகர் அஜித்தும் தன்னுடைய நண்பர்கள் மூலம் மறைமுகமாக உதவி செய்து வந்தார். அப்படி தான் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் மேல் நின்று உதவி கேட்டார் விஷ்ணு விஷால் உடன் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இந்த வெள்ளத்தில் சிக்கியிருந்தார். அமீர் கான் தன்னுடைய தாயின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார்.

விஷ்ணு விஷால் உதவிகரம் கேட்க நடிகர் அஜித்குமார் விஷ்ணு விஷால், அமீர் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இருக்கிறார்.  அதன் பிறகு விஷ்ணு விஷால் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அஜித் உதவி செய்ததை பக்கத்தில் போட்டுள்ளார் இதை பார்த்த போஸ் வெங்கட் பதிவு ஒன்றை போட்டு பரபரப்பை கிளப்பினார்.

விஜய் பெயரை டேமேஜ் செய்த ரசிகர்.. இந்த ஒரு போட்டோ போதும்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இங்கிருக்கும் அத்தனை வடநாட்டவர்களையும் தமிழகம் காக்கும் உங்களுக்குள் நல்ல அன்பு உண்டு ஆனால் உங்களை விரும்பும் டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்பொழுதும் கேட்க வாய்ப்பு வாய்ப்பு இல்லை என பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த ஜான் கொக்கன் ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் குறை சொல்லியே ஆவார்கள். அதற்கு இந்த கதை தான் உதாரணம் என்று போஸ்ட் ஒன்று பதிவிட்டு போஸ் வெங்கட் அவர்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.