KGF, ஸ்பைடர் மேன், ஹல்க், என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் கலாய்த்துள்ள யோகி பாபு-ஓவியாவின் பூமர் அங்கிள் படத்தின் டிரைலர்.! இது கவர்ச்சி படமா இல்ல திரில்லர் படமா.?

yogibabu
yogibabu

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் ஹிட் கொடுத்தாலும் அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருகிறார்கள் அந்த வகையில் ஓவியா ஒரு சில திரைப்படங்களை ஹிட் கொடுத்துவிட்டு பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்தார் இந்த நிலையில் தற்பொழுது ஓவியா நீண்ட இடைவெளிக்கு பிறகு யோகி பாபு உடன் இணைந்து பூமர் அங்கில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பூமர் அங்கிள் திரைப்படத்தில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர் தங்கதுரை, சோனா என பலர் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தை கார்த்திக் தில்லை என்பவர் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம். மேலும் காமெடியை தாண்டி ஓவியாவின் கவர்ச்சி கடலையும் இந்த படத்தில் வீசி உள்ளார் அதனை ட்ரெய்லரை பார்க்கும் பொழுது தெரிகிறது.

முதலில் கே ஜி எஃப் திரைப்படத்தை கலாய்க்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் ஹல்க், வொண்டர் வுமன், ஸ்பைடர் மேன் என பல திரைப்படங்களை கலாய்த்துள்ளதாக போல் திரில்லரான பேய் காட்சிகள் இந்தத் திரைப்படத்தின் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான மிஷ்கின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பூமர் அங்கில் திரைப்படத்தின் டிரைலரை தற்பொழுது வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ பூமர் அங்கிள் ட்ரெய்லர்..