பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி உடன் வந்த நந்தினி ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்.!

ponniyin-selvan-2

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது இந்த படத்தின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நந்தினியின் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தற்பொழுது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ்காக மிகவும் ஆர்வமுடன் காத்து வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் போஸ்டர் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் அகநக பாடல் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டானது.

மேலும் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா போன்றவர்களின் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியான நிலையில் தற்பொழுது ட்ரெய்லர் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் முதல் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்ற நிலையில் அதனை விட இரண்டாவது பாகம் நல்ல வரவேற்பினை பெறும் என்ற எதிர்பார்ப்பில் படக் குழுவினர்கள் இருந்தார். அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் போஸ்டரில் நந்தினியின் கதாபாத்திரத்துடன் கூடிய மார்ச் 29ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ponniyin selvan
ponniyin selvan

எனவே அனைத்து படப்பிடிப்புகளும் முடித்தவுடன் ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழுவினர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இவ்வாறு முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பினால் இரண்டாவது பாகத்தில் நிறைய மாற்றங்கள் மணிரத்தினம் அவர்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.