வலிமை படத்தை பற்றியும், OTT குறித்தும் மீடியாவுக்கு அதிரடியாக பதிளதித்த போனிகபூர்.!

thala

தமிழ் சினிமா உலகில் பெரும்பாலான நடிகர்கள் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது இல்லை ஏனென்றால் அத்தகைய படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதில்லை என்பதனால் முன்னணி நடிகர்கள் கூட  நடிக்க தயங்கி வருவது நாம் அறிந்ததே ஆனால் அதிலிருந்து மாறுபட்ட கருத்து உடையவர் தான் தல அஜித்.அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி அடைவது முக்கியமில்லை மக்களிடம் கருத்துகள் போய் சேர்வதையே அதிகம் விரும்பக் கூடியவர் அஜித்.

அந்த வகையில் இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களான விசுவாசம், நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அத்தகைய படங்களை தொடர்ந்து அவர் இளம் இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் அவர்கள் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முழுவதும் முடிந்த பின் அடுத்த படப்பிடிப்பு எடுக்கப்படும்  என தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடுங்கள் என கூறிவருகின்றனர்.படக்குழுவினரும்  ரசிகர்களுக்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் பாலிவுட் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியது.

ajith thala
ajith thala

வலிமை படம் கொரோனா தாக்கம் குறைந்ததும் ஆரம்பமாகும் என கூறியுள்ளார். மேலும் அவரிடம் OTT தளங்கள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். காலங்கள் மாறி வருகின்றன அதற்கேற்றவாறு நாமும் மாறிக்கொண்டு ஆக வேண்டும் தயாரிப்பாளர்களுக்கு அந்த தளம் உதவுகிறது. ஆனால் இது வரை நான் தயாரித்த அனைத்து படங்களும் தியேட்டரில்தான் வெளியாகியது அதுபோல தல அஜித்தின் வலிமை படமும் வெளியாகும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வலிமை படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்குமென மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.