போண்டாமணி நடிக்கலன்னா இந்த படத்தில் நாங்களும் நடிக்கவே மாட்டோம்… வாய்ப்பு வாங்கி கொடுத்த இரண்டு நடிகர்கள்…

bonda mani
bonda mani

sundara travels movie chance : நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவால் சமீபத்தில் காலமானார் இவரின் இறப்புக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தார்கள் இவர் வடிவேலுவின் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலுக்கு துணையாக நடித்திருப்பார். அண்ணே போலீஸ் வந்தாங்களா ஏதாச்சும் சொல்லி கேப்பாங்க எதுவும் சொல்லிடாதீங்க அடிச்சு கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க என அந்த காமெடி சீனில் பேசியிருப்பார்.

அதேபோல் மற்றொரு காட்சியில் டுபாக்கூர் என்ற ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கும் போண்டாமணி ஹோட்டலில் வடிவேலு ஊத்தாப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் காட்சியும் மிகவும் பிரபலமாக இருந்தது.ஒரு திரைப்படத்தில் பஸ்ஸில் பாம்பாட்டியாக பாம்புடன் பசுக்குள் அமர்ந்து கண்டக்டர் வடிவேலுவை டார்ச்சர் செய்வார்.

10 கோடி எடுத்து வையுங்க எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. வெற்றிமாறன் வைத்த ட்விஸ்ட்.. ஆட்டம் கண்ட சூர்யா

இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த போண்டா மணி சமீபத்தில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு பலர் உதவி செய்தாலும் சிகிச்சை பெற்று குணமடைந்தார் இருந்தாலும் உடல் நலம் பலவீனமாக இருந்தது தற்போது அவருக்கு 60 வயதான நிலையில் சமீபத்தில் காலமானார் மறைந்த போண்டாமணி முன்பு ஒரு முறை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டி வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதாவது போண்டாமணி அந்த காட்சியில் நடித்தால் மட்டுமே நாங்கள் இந்த திரைப்படத்தில் நடிப்போம் என இரண்டு பிரபல நடிகர்கள் சொல்லி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது அப்படிதான் போண்டா மணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்களாம் அவர் அந்த பேட்டியில் போண்டாமணி கூறியதாவது சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் ஒரு மலையாள டைரக்டர் அந்தத் திரைப்படத்தில் கல்யாண கூட்டத்தை திருப்பதிக்கு அழைத்துச் செல்ல சுந்தரா ட்ராவல்ஸ் பஸ் உடன் முரளி வடிவேலு அங்கு வந்து இருப்பார்கள்.

மகாவை வீட்டை விட்டு துரத்திய சூர்யா.. விஜய்க்கு இருக்கிற பக்குவம் கூட இல்லை.. விளாசம் ரசிகர்கள் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அதேபோல அந்த திரைப்படத்தின் ப்ரொடியூசர் தங்கராஜ் மேக்கப் போட்டு மாப்பிள்ளை தயாராக இருக்கிறார் அப்பொழுது மாப்பிள்ளை கேரக்டரில் போண்டாமணி தான் நடிக்க வேண்டும் என நடிகர் முரளி மற்றும் வடிவேலு இருவரும் கூறி விட்டார்கள் அந்தக் காட்சி மிக முக்கியமான காட்சி என்பதால் அவர்தான் நடிக்க வேண்டும் என கூறினார்கள் ஆனால் அந்த திரைப்படத்தில் ஏற்கனவே மலையாளத்தில் நடித்த நடிகர் தான் நடிக்க வேண்டும்.

போண்டாமணியை வேண்டாம் என இயக்குனர் எவ்வளவு கூறியும் வடிவேலு மற்றும் முரளி கேட்கவில்லை அந்த சீனியில் போண்டாமணி நடித்தால் மட்டுமே நாங்கள் நடிப்போம் இல்லையென்றால் நாங்கள் இந்த திரைப்படத்தை விட்டு போய் விடுவோம் என இரண்டு பேருமே கண்டிப்பாக கூறி விட்டார்கள். என் மீது அவர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்து அந்த காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார்கள்.

கொடுமைக்கார மாமியார் எனக்கு இருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன்.. ஸ்ருதியின் பேச்சால் அதிர்ந்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்பொழுது 250 அடி ஒரே நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது அதில் மாப்பிள்ளையாக நடித்த என் மீது பசின் கரும்பொகை என் மீது கொட்டி விடும் அந்த காமெடி மிகப்பெரிய காமெடியாக அமைந்துவிட்டது என போண்டாமணி கூறியிருந்தார்.