தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சியான் விக்ரம்.
இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் இவர் நடித்திருந்த 10என்றதுக்குள்ள, சாமி, அருள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தற்பொழுது சியான் விக்ரம் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பெசன்ட் நகரிலுள்ள விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆள் அடையாளம் தெரியாத ஒரு நபர் காவல்துறையின் முக்கிய அறைக்கு போன் பண்ணி விக்ரமின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறியதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது.
இதைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதாவது வெளிவருமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.