நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததால் அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.இயக்குனர் லோகேஷ் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை ரசிகர்களுக்கு வெளியிட்டு வந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் கே.ஜி.எப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தான் சஞ்சய் தத்.
இவர் நடிகர் விஜயுடன் காஷ்மீரில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது எடுத்த புகைப்படத்தை கூட நாம் பார்த்திருக்கலாம்.இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்ததாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் துருவா சர்ஜா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத் ஆகிய இருவரும் பயங்கரமாக சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வந்துள்ளது.
விறுவிறுப்பான சண்டை காட்சி எடுத்து வந்த பொழுது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த டம்மி குண்டு சற்று வேகமாக வெடித்துள்ளது அதன் மூலம் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் டம்மி குண்டு வெடித்ததில் அவருக்கு பயங்கர காயமா இந்த டம்மி குண்டு வெடிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளிவருமா போன்ற ஒரு சில கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.