சாத்தியமற்றது என பிரபல தமிழ் நடிகைக்கு புகழாரம் சூட்டிய பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத்.!

Kangana-Ranaut-1

பிரபல முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் தற்பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகையின் நடிப்பை தான் ஈடு செய்வது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இவர்களைத் தொடர்ந்து நாசர், மாளவிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்கள் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் முக்கியமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்திருந்தவர் தான் நடிகை ஜோதிகா.

இந்தப் படத்தில் இவருடைய நடிப்பிற்கு அதிக அளவில் பாராட்டுகள் கிடைத்தது சந்திரமுகியாகவே வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் இணைந்துள்ளார் இதனை அடுத்து சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kangana Ranaut
Kangana Ranaut

பி வாசு இயக்க இருக்கும் இந்த இரண்டாவது பாகம் சந்திரமுகி படத்தினை முழுவதுமாக ஒத்து இருக்காது வேறு ஒரு கதை கலத்துடன் அமையும் எனவும் கூறி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கங்கனா ஜோதிகா சந்திரமுகியாக நடித்தது குறித்து புகழாரம் கூறியுள்ளார். அதில் அவர், “உண்மையில் சந்திரமுகியில் ஜோதிகாவின் ஐகானிக் நடிப்பை நான் தினம்தோறும் பார்த்து வருகிறேன் ஏனென்றால் நாங்கள் தற்பொழுது கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறோம்.. முதல் பாகத்தின் ஜோதிகாவின் நடிப்பு வியப்பாளிக்கும் வகையில் இருந்தது அவரின் இந்த நடிப்பை ஈடு செய்வது என்பது சாத்தியமற்றது” என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.