2022ல் பாலிவுட்டில் அதிக வசூல் வேட்டையாடிய திரைப்படங்கள்.!

movies
movies

தென்னிந்திய திரைப்படங்களை டப்பிங் செய்து ஹிந்தி திரை உலகில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் சில படங்கள் மட்டுமே பல கோடி வசூலை அள்ளியது. அப்படி ஹிந்தி சினிமாவில் அதிக வசூலை வேட்டையாடிய ஐந்து திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கே ஜி எஃப் 2:- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான ஒரு அதிரடி திரைப்படம் கேஜிஎப் 2. இந்தத் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், என ஐந்து மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது.

ஆர் ஆர் ஆர்:- ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவான ஒரு வரலாற்று சிறப்பு அம்சம் உள்ள ஒரு கதை தான் ஆர் ஆர் ஆர். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

காந்தாரா:- ரிஷப் செட்டி இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான காந்தாரா திரைப்படம் கர்நாடக மக்களை பெரிதும் கவர்ந்தது. இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்றது.

கார்த்திகேயா 2 :- 2022 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கார்த்திகேயா 2 இந்த படம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் பல கோடி வசூலும் செய்தது.

பொன்னியின் செல்வன்:- இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படம் என்பதால் ரசிகர் மத்தில் பெரும் ஆதரவை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.